இரண்டு தலைகள் மூன்று கண்களுடன் பிறந்த கன்று!

ஒடிசாவில் இருதலைகள் மற்றும் மூன்று கண்களுடன் பசு ஒன்று கன்று ஈன்றது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். நாட்டில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் சில அதிசியதக்க பிறப்பை தருகின்றன. இவற்றை மக்கள் அதிசயமாக பார்ப்பது வழக்கம். இதே போன்று சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாநில நப்ரங்க்பூர் மாவட்டம் பிஜாப்பூர் கிராமத்தை சேர்ந்த தனிராம் என்ற விவசாயிக்கு சொந்தமான பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இரு தலைகள் மற்றும் மூன்று கண்கள் இருந்தன. இதை பார்த்து விவசாய குடும்பத்தினர் ஆச்சர்யப்பட்டனர்.
இந்த தகவல் கிராமம் முழுக்க பரவியது. உடனே, கிராம மக்கள் தனிராம் வீட்டுக்கு வந்து அதிசய கன்றை ஆச்சர்யமாக பார்த்து சென்றனர். சிலர் நவராத்திரி சமயத்தில் துர்கை அவதாரமாக கன்று வந்துள்ளது என்று வணங்கி சென்றனர். இது தொடர்பாக விவசாயி கூறுகையில், ‘இருதலையுடன் பிறந்துள்ளதால் பசுவிடம் பால்குடிப்பதில் கன்றுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெளியில் பால் வாங்கி அதற்கு கொடுத்து வருகிறோம்.’ என்றார்.
…