அமெரிக்காவை விட சீனா பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்க காரணம் என்ன?

அமெரிக்கா 98 லட்சத்து 33 ஆயிரத்து 520 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 33 கோடி 10 லட்சத்து 03 ஆயிரம் மக்கள் வாழுகிறார்கள். கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் மக்களை கொண்ட அமெரிக்காவின் நாணயம் தான் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு அதிக பங்கு வகிக்கிறது. இருந்தும் அமெரிக்கா நாட்டின் டொலர் அந்த நாட்டில் இருப்பதை விட சீனா அதிகமான டொலர்களை தன் இருப்பில் வைத்து கொண்டிருப்பது தான் அமெரிக்காவை விட சீனா பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகுக்க முதல் காரணம்.

ஆரம்பத்தில் இந்தியாவின் வாசனை திரவியங்களை தேடி ஐரோப்பியா நாட்டை சேர்ந்த கொலம்பஸ் கடல் வழி பயணம் செய்தார் அப்போது தான் அவர் முதல் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அமெரிக்காவில் காலடி வைக்கும் போது கொலம்பஸ் இதுதான் இந்தியா என நினைத்தார் பிறகு தான் அமெரிக்கா என புரிந்து கொண்டார்.

அமெரிக்கா அதிபருக்கு நாலு ஆண்டுகள் தான் பதவி வகிக்கலாம் பிறகு ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மீண்டும் நாலு ஆண்டுகள் இருக்கலாம். உலக நாடுகளின் தரப்படுத்தல் அடிப்படையில், அமெரிக்கா
கல்வியில் 14 வது இடத்தில் இருக்கிறது.
சுகாதாரம் 64 வது இடம்.
கணித அறிவு 35 வது இடம்.
எழுத்தறிவு 15 வது இடம்.
அறிவியல் ஆற்றல் 22 வது இடம்.
சராசரி மக்கள் ஆயுள் 49 வது இடம்.
மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் பட்டியலில் 14 வது இடம்.
இணையத்தள வசதி 19 வது இடம்.
பத்திரிகை சுதந்திரம் 47 வது இடம்.
குழந்தை தடுப்பூசி போடுதலில் 89 வது இடம்.

என அனைத்துலும் உலக நாடுகளின் வரிசையில் பின்னுக்கு நிற்கும் அமெரிக்கா, சிறை கைதிகளை அதிகமாக கொண்ட நாடு. இங்கு, 09 மில்லியன் மக்கள் சிறை தண்டனை கைதிகள். இந்த கைதிகளுக்காக ஆண்டுக்கு 3.1 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.

அதேநேரம், அதிகமாக தண்ணீரையும் உணவுகளையும் வீண் விரயம் செய்யும் நாடுகளில் முதலிடம். இங்கு சராசரி ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு 35 டன் உணவுகளை வீண் விரயம் செய்கிறார். போரை அதிகம் விரும்பும் ஒரு நாடு அதற்கு காரணம் அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து அதை பரீட்சித்து பார்க்க போரை தெரிவு செய்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் செய்து 2 1/2 இலட்சம் அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்கா கடந்த 2016 ஆண்டு காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது நடந்த போரில் 2386 இராணுவ வீரர்களை இழந்தது.

மேலும், மனிதனை மனிதன் அடிமை படுத்தி மிருகங்களை போல் நடத்திய அந்த காலத்தில் உலகம் அடிமைத்தனத்தை ஒழித்த போது அமெரிக்கா கடைசியாக 1873 ஆம் ஆண்டு தான் அடிமைகளுக்கு விடுதலை கொடுத்தது. ரஷ்யா 1723 ஆண்டும், சீனா 1725 ஆண்டும் போர்த்துகல் 1762 ஆம் ஆண்டும் அடிமைத்தனத்தை இல்லாமல் செய்தது. இந்த தரவுகளின் அடிப்படையில் ரஷ்யாவை விட 150 ஆண்டுகளுக்கு பிறகு தான் அடிமைகளை விடுதலை செய்தது அமெரிக்கா.

இன்னும், தற்போதைய உலக கணக்கெடுப்பின்படி 790 கோடி மக்கள் உலகில் வாழுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 15 லட்சத்து 80 ஆயிரம் பேர்கள் இறந்து போகிறார்கள். 14 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் மணிக்கு ஒருவர் மது பழக்கத்தால் இறக்கிறார். இதில் 50 சதவீதம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. புகை பழக்கத்திற்கு அடிமையாகி இயற்கை மரணத்தில் 05 சதவீதம் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மரணிக்கிறார்கள்.

எது எப்படியிருந்தாலும், ஒரு அரச பதவியையும் ஒரு இலட்சம் காசையும் கையில் வைத்துக் கொண்டு ஒரு இலங்கையரிடமும் ஒரு அமெரிக்கரிடமும் இதில் எது வேண்டும் என்று கேட்டால் இலங்கையர் அரசாங்க பதவியை எடுப்பார் அமெரிக்கர் பணத்தை எடுப்பார். காசை கொண்டு அமெரிக்கர் காலப்போக்கில் இலங்கையரை விட பல மடங்கு முன்னேற்றம் அடைந்து இருப்பார். இலங்கையர் அதே பதவியில் இருந்து இறுதியில் ஓய்வூதியம் எடுத்துக் கொண்டு இருப்பார். கடைசியாக அந்த ஓய்வூதியம் பெறும் நபருக்கு பணத்தை எடுத்து உழைத்த முதலாளி வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பார்.

இதனால் தான் அமெரிக்காவின் 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கு பொது பாடசாலைகள் 98850 இதைவிட ஐந்து மடங்கு அதிகமாக சோப்பின் சென்டர்களும் வர்த்தக நிலையங்களும் இருக்கிறது. இங்கு தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் தொகையை விட முகநூல் பாவனையாளர்கள் அதிகம்.

நன்றி ஐனி,
கிண்ணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *