மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் அமைச்சர் பந்துல ஆடைகளை
அகற்றிவிட்டு ஓட வேண்டும்!

இலங்கை வரலாற்றிலே முதன் முதலாக ஒரே தடவையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,200 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2014 ஆம் ஆண்டு 2400ஆகவிருந்த எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 1000 ரூபாவால் குறைக்கப்பட்டது என்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் சுமார் 07 வருடங்களுக்குப் பின்னர் தான் எரிவாயுவின் விலை 1,000 ரூபாவால் அதிகரிக்கப்பட் டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிறுவனங்களின் மீது குற்றம் சுமத்த மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையால் குறித்த நிறுவனங்கள் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு தங்கள் நிறுவனங்களை நடத்திச் செல்வதற்காக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12 வருட காலமாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை செயற்பட்டு வருகின்றது.

நுகர்வோர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை சங்கத்துக்கும் இடையில் நல்ல உறவு காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என்றும் நுகர்வோர் தற்போது அடைந்துள்ள நிலையைக் கருத்திற்கொண்டு செயற்படுவோம் என்றும் அரசாங்கத்தை விட நாங்கள் மக்களுக்காக மனித நேயத்துடன் செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் பகல் நேர உணவுப் பொதியின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் உதாரணமாக 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்த பொதியை 140 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதனை விட அதிகரித்திருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோரைப் பாதுகாப்பதற்காகவும் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நுகர்வோர் செல்வதை நிறுத்தாமல் அவர்களுக்கு இடையிலான தொடர்பைப் பேணும் வகையில் மனித நேயத்தில் தான் உணவுப் பொதிக்கான விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து (kottu), உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாவினால் உயர்த்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மற்றும் ஏனையோரை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கிய பால் தேநீர் 60 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது என்றும் தற்போது ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது என்றும் நுகர்வோரை கருத்தில் கொண்டு சிற்றுண்டிச்சாலைகளை வழி நடத்திச் செல்வதற்காக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பால் தேநீர் 60 ரூபாவால் அதிகரித்தாலும் தேநீரின் விலை அதிகரிக்கப்படாது என்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கோதுமை மா 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் ரொட்டியின் விலை அதிகரிக்கப்படும் என்றும் காலை, மதியம் , இரவு நேரங்களில் பிரதான உணவாகக் கொண்டவர்களுக்காக அதிகமானோர் ரொட்டி உற்பத்தியைத் தொழிலாகக் கொண்டுள்ளமையால் எதிர்காலத்தில் 10 ரூபா அதிகரிக்கப்படும் என்றும் அது குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு விற்பனை நிலையங்களில் உப்பு முதல் கை துடைப்பு பேப்பர் வரை அரசாங்கத்தால் வழங்கப்ப டுவதில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்படுவதால் உணவு நிலையங்கள் மூடி திறக்கப்படுவதாலும்  மற்றும் சுகாதார வழிகாட்டு முறைகளின்படி செயற்படவேண்டும் என்றால் இட வசதி போதாமை காணப்படுகின்றது என்றும் கடைகளுக்குக் கூலி செலுத்த வேண்டும் என்றும் மின்சாரம், நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்றும் 275 ரூபாவுக்கு இருந்த தேங்காய் எண்ணெய் 575 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றும் எரிவாயு அதிகரித்துள்ளது என்றும்  இதனால்  உணவு விற்பனையாளர் அதிகளவு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்கியுள்ளது என்றும் தற்போதைய ஜனாதிபதி ஹோட்டல் உரிமையாளர்கள் குறித்து கண் திறந்து பார்க்கவில்லை என்றும் ஹோட்டல் சேவை யாளர் குறித்து அரசாங்கம் கருத்திற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள்  30 ரூபாவால் பொருட்களின் விலையை உயர்த்துகிறோம் என்று அறிவிக்கலாம். ஆனால் நுகர்வோரின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவ்வாறு செயற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கும், உணவு நிலையங்களுக்கும் அரசாங்கம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தையோ நீர் கட்டணத்தையோ செலுத்த வேண்டும் அல்லது மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணம் மனித நேயத்துடன் செயற்படுகிறோம் என்றும் பொதுமக்கள் உயிர் வாழ்வதற்காக போஷாக்கான உணவு தொடர்பாக பாரதூரமான ஆபத்து நிலவுகின்றது என்றும் வீட்டில் உணவுகளைச் சமைக்கலாம் என்று நினைத்தால் எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது சீமெந்து விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய நிறுவனங்களாக இருந்திருந்தால் 100க்கு 100 வீதம் பொருட்களின் விலையை அதிகரித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களுக்கு ஏற்ற விலையில் பொருட்களை விற்க அனுமதி வழங்கியுள்ளமையால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் அப்பாவி பொதுமக்கள் மூன்று நேரம் உணவு உட்கொள்ளாது இரண்டு நேரம் உணவு உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சகல பொருட்களின் விலையை 10 ரூபாவால் நாளை(இன்று) முதல் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன  ஆடைகளை அகற்றிவிட்டு ஓட வேண்டும் என்றும் பால்மா, எரிவாயு, சிமெந்து, கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை நிர்ணயித்தது நிறுவனங்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதற்கு? இப்போதாவது ஆட்சியைத் துறந்து விட்டுச் செல்லுங்கள் என்றும் ஜனாதிபதி சொன்னார் இரட்டிப்பாகச் செயற்படுவதாக. அதன் பிரதிபலன் தான் நிறுவனங்கள் இரட்டிப்பாக பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் தமது கெளரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு வெளியேறுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தேர்தலை நடத்துங்கள் என்றும் அரங்கத்திடம் கோருவதாக  அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது பொதுமக்களின் பணத்தில் நாட்டை வழிநடத்திச் செல்ல முயல்கிறது என்றும் அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *