நான் கனவில் கூட இப்படி நடக்கும் நினைக்கல! எஸ்.பி.பி மரணம் குறித்து வேதனையில் ரஜினி!

பிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் எஸ்.பி.பி மரணம் குறித்து வேதனையுடன் டுவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் உயிரிழந்தார்.

இவரின் மரண செய்தி திரைப்பிரபலங்களிடையே மட்டுமின்றி, ரசிகர்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் கடைசியாக நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக கூறப்பட்டது.

அதன் பாடல் இன்று வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *