தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்த 593 பணியாளர்கள் இடைநிறுத்திய விமான நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி போடமாட்டோம் என முடிவு செய்த சுமார் 600 பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமெரிக்க யுனைடெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் தங்களது பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் யுனைடெட் நிறுவனம் உத்தரவிட்டது.
அதற்கான சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் அமெரிக்காவில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 593 பேர் தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்காத காரணத்தால் அவர்களை பணிநீக்கம் செய்யும் வேலை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸூக்கு 67,000 பணியாளர்களில் 3% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….