பிரித்தானிய போர்க்கப்பலை விரட்டிய சீன படைகள்!

தைவான் ஜலசந்தியில் பிரித்தானியா போர்க்கப்பல் இயக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என தொடா்ந்து கூறி வரும் சீனா, இதனால் தைவான் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா பொருளாதார தடைகளை அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவின் HMS Richmond போர்க்கப்பல் கிழக்கு சீனக் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், HMS Richmond வியட்நாம் செல்லும் வழியில் தைவான் ஜலசந்தியை கடந்துவிட்டது என போர்க்கப்பலின் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

HMS Richmond தைவான் ஜலசந்தி வழியாக இயக்கப்பட்தற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தைவான் ஜலந்தி வழியாக சென்ற HMS Richmond போர்க்கப்பலை பின்தொடர்ந்து எச்சரிக்க சீன வான் மற்றும் கடற்படை முடக்கிவிட்டப்பட்டது.

பிரித்தானியாவின் இந்த வகையான நடத்தை தீய நோக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக் கூடியது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *