என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார் வெளியில் வைரமுத்து மனைவியும் என் அம்மாவும் இருந்தனர்!

வைரமுத்து வேட்டையாடும் விதம் , பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள் என்கிற தலைப்பில் சில்வர்ஸ்கிரீன் இந்தியாவில் வைரமுத்து பற்றி பாலியல் துன்புறுத்தல் பற்றி பின்னணி பாடகி சின்மயி கூறியதாக வெளியான தகவல் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது, இதை சின்மயி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார், அதில் தெரிவித்துள்ளதாவது. “எனக்கு நினைவிருக்கிறது, சில ஆவணங்களில் கையெழுத்திட நான் வைரமுத்தின் அலுவலகத்தில் இருந்தேன்.

ஒரு இசைநிகழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன்… கதவு திறந்திருந்தது. நான் உள்ளே சென்று கையெழுத்திட்டேன். அவர் தனது மேஜையின் ஒரு புறம் அமர்ந்திருந்தார் நான் மறுபுறம். அவர் தன் முனையில் இருந்து எழுந்து என்னிடம் வந்தார், நானும் மரியாதை நிமித்தமாக எழுந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்… நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு விரைந்து கீழே ஓடினேன்.

பொன்மணி (வைரமுத்துவின் மனைவி, அவரும் ஒரு கவிஞர் மற்றும் மீனாட்சி பெண்கள் கல்லூரியின் மேனாள் பேராசியர்) என் அம்மாவுடன் கீழே பேசிகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கீழே என் அம்மாவும் இருந்தார்கள். அங்கு ஒரு கோவில் இருந்ததால் அம்மா மிகவும் ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், வைரமுத்து ஒரு நாஸ்திகர் என்பதனால். அம்மா அந்த இடத்தைப் பார்க்க விரும்பினார். எங்கள் கார் நிறுத்தப்பட்ட நேரத்திற்கும், கோயிலைப் பார்க்க என் அம்மா வந்த நேரத்திற்கும் இடையில், நான் மீண்டும் வெளியே விரைந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *