ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் 18 வயது வீராங்கனை!

டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக உள்ளது – எம்மா ரடுகானு.

யு.எஸ். ஓபன் போட்டியில் இரு பதின்ம வயது வீராங்கனைகள் அரையிறுதி ஆட்டங்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். தரவரிசையில் 73-ம் இடத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த 19 வயது லேலாவும் 150-வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானுவும் இறுதிச்சுற்றில் மோதியதில் எம்மா ரடுகானு யு.எஸ். ஓபன் மகளிர் சாம்பியன் ஆனார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள டபிள்யூடிஏ தரவரிசையில் 150-வது இடத்தில் இருந்த எம்மா ரடுகானு, 127 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

2004-ல் 17 வயதில் மரியா ஷரபோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை, தகுதிச்சுற்று வழியாக பிரதான போட்டிக்கு நுழைந்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் என்கிற சாதனைகளை யு.எஸ். ஓபன் வெற்றியின் மூலம் படைத்துள்ளார் எம்மா ரடுகானு.

யு.எஸ். ஒபன் வெற்றிக்குப் பிறகு எம்மா ரடுகானுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். இன்ஸ்டகிராமில் 1.7 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். யு.எஸ். ஓபன் வெற்றி பற்றிய அவருடைய இன்ஸ்டகிராம் பதிவுக்கு 10.81 லட்சம் பேர் லைக் தந்துள்ளார்கள். இதனால் டென்னிஸ் உலகில் புதிய மலர்ச்சியை உருவாக்கியுள்ளார் எம்மா ரடுகானு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *