நாளாந்தம் 15ஆயிரம் பிசிஆர் சோதனைகள் கூட நடைப்பெறுவதில்லை!

தற்போது நாட்டில் தினமும் 75,000 பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தாலும், 15,000 பிசிஆர் சோதனைகள் கூட முன்னெடுக்கப்படுவதில்லை என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிசிஆர் சோதனைகளை குறைந்தளவான பணியாட்களை கொண்டே முன்னெடுப்பதே பிசிஆர் சோதனைகளின் குறைப்பிற்கு காரணம் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகளை முன்னெடுப்பவர்களுக்கு அதிக பணிச்சுமையை கொடுப்பது சோதனை செயல்முறையை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், 42 ஆய்வகங்கள் தற்போது பிசிஆர் சோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக மாதிரிகளைப் பெற்றால் சோதனைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகளை முன்னெடுக்காமை தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், அதே நேரத்தில் பொறுப்பான குழு மாதிரிகளை மதிப்பீடு செய்ய தயாராகவுள்ளது என்றார்.
சுகாதார அமைச்சு சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க நிபுணர்களை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *