சட்டவிரோதமாக சீனியை பதுக்கி வைத்திருந்த 4 களஞ்சியசாலைகளுக்கு சீல்!

சட்டவிரோதமாக சீனி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 4 களஞ்சியசாலைகள் இன்று முத்திரையிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த களஞ்சியசாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 400 மெற்றிக் டன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *