சுரேஷ் ரெய்னாவின் சுயசரிதை புத்தகத்தை MS தோனிக்கு அன்பளிப்பு செய்தார்!

இந்திய அணியின் முன்னாள் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவினை அறிவித்தார். இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி சில விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ரெய்னா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் இந்திய அணிக்கு திரும்ப முடியாத காரணத்தினால் தோனியோடு சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வை அறிவித்தார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியும், துணைக்கேப்டனாக ரெய்னாவும் தற்போதுவரை செயல்பட்டு வருகின்றனர்.

காலங்களை கடந்து அவர்களுக்கு இடையே உள்ள நட்பு நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வேளையில் பயிற்சியின் இடையே தனது சுயசரிதை புத்தகத்தை ரெய்னா பலருக்கும் பரிசாக கொடுத்துள்ளார். அப்போது கேப்டன் தோனிக்கும் அந்த புக்கை கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் “Thala’s Touch On My Untold Story” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *