கொழுப்பு நகரத்தின் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூடுமாறு கோரிக்கை!

கோவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கையாக கொழும்பு நகரத்தின் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூடுமாறு கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த கொழும்பு நகரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் சில நாட்களுக்கு மூடுமாறு அவர் கோரியுள்ளார்.

நகரத்தில் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களை மூடுவதன் மூலம் தமக்கு ஆதரவை தருமாறு ரோஸி சேனாநாயக்க அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுள்ளார்.

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 90% க்கும் அதிகமான தொற்றாளர்கள், கொழும்பு நகரத்தில் பதிவாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நகரத்தில் உள்ள அனைத்து வியாபாரத் தளங்களையும் மூடுவதற்கான வர்த்தக சங்கங்களின் நடவடிக்கையை, ரோஸி வரவேற்றுள்ளார்.

அத்துடன் 2022 ஜனவரிக்குள் 30,000 பேர் கோவிட் நோயால் இறப்பார்கள் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரோஸி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *