ஒலிம்பிக் போட்டியும், அதன் வரலாறும்!

கி.மு. 776 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் ஒலிம்பியா என்னுமிடத்தில் நடைபெற்ற போட்டியே முதல் ஒலிம்பிக் போட்டியாகும். இதையே பண்டைய கால ஒலிம்பிக் போட்டி என்று குறிப்பிடுவர்.

கிரேக்கக் கடவுள் ஜீயசின் மகன் ஹெர்குலிஸ் தான் ஒலிம்பிக்கை உருவாக்கினார் என்ற நம்பிக்கை கிரேக்கர்களிடம் இருந்தது. பல சாகசம் புரிந்த ஹெர்குலிஸ் கிரேக்கர்களின் நாயகனாக திகழ்ந்தார்.

ரோம சக்கரவர்த்தி முதலாம் தியோடியசால் தடைசெய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி 1500 ஆண்டுகள் கழித்து 1896ஆம் ஆண்டு கிரேக்க தலைநகரம் ஏதென்ஸில் நடைபெற்றது.

இதுவே முதல் நவீன ஒலிம்பிக் போட்டியாகக் கருதப்படுகிறது.

1500 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டியை திரும்பவும் நடத்த பெரும் முயற்சி எடுத்தவர் “பைரே டீ போர்ட்டின்”

ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தனக்கான திறமைகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட ஒலிம்பிக் போட்டிகள் வழிகோலியது. 1900 ஆம் ஆண்டு முதன் முதல் ஒலிம்பிக் சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது.

அந்த ஆண்டு சார்லஸ் கூப்பர் என்ற பெண் வீராங்கனை ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் பெண்ணானார்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டி போலவே குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக்கின் கால இடைவெளி 4 ஆண்டுகள் இந்த 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முறையானது பண்டைய கால ஒலிம்பிக்கில் இருந்து பின்பற்றப்படுகிறது.

இந்த நான்கு வருட இடைவெளி “ஒலிம்பியாட்” என அழைக்கப்படுகிறது.

1994 ஆம் ஆண்டு முதல் கோடைகால ஒலிம்பிக் போட்டி முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

1896 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

தற்போது ஜப்பானில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டி 32-வது ஒலிம்பிக் போட்டியாகும்.

இந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் 339 பிரிவுகளின் கீழ் 206 நாடுகளை சேர்ந்த 11000-த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டியில் புதியதாக 6 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் surfing, karate, skating, sport climbing என்னும் நான்கு விளையாட்டுக்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, 13 ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட baseball and soft ball ஆகிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியூரி டி கூபர்டீன் என்பவரால் 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த ஒலிம்பிக் கொடியில் காணப்படும் 5 வளையங்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக ஒலிம்பிக் சட்டத்தின் எட்டாவது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கொடியில் காணப்படும் 6 நிறங்கள் முறையே நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் ஏதேனும் ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடிகளில் அமைந்திருக்கும் வண்ணம் இந்த நிறங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“IMMORTAL SPIRIT OF ANTIQUITY” என்னும் ஒலிம்பிக் கீதத்தை கிரேக்க பாடலாசிரியர் கோஸ்டிஸ் பலமாஸ் எழுத, சமராஸ் இசையமைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுவதில்லை.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றன.

ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பதக்கங்களில் கிரேக்க பெண் கடவுள் நைக்கியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் அதில் 550 கிராம் வெள்ளியும் 6 கிராம் தங்கமும் கலக்கப்பட்டு இருக்கும்.

வெள்ளிப் பதக்கம் 550 கிராம் எடையுடன் காணப்படும் இது 550 கிராம் முழுவதும் வெள்ளியால் ஆனது.

வெண்கல பதக்கம் 450 கிராம் எடையுடன் காணப்படும் இதில் 95% செம்பும் 5% துத்தநாகம் கலக்கப்படுகிறது.ப.இளமாறன்

நன்றி : ப.இளமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *