இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை ஆரம்பம் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் உச்சமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்த ஒன்றரை ஆண்டுகளில், பலரும் தங்களது சொந்தங்கள், நண்பர்கள் என இந்நோக்கு பறிகொடுத்துள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்வதே. ஆனால் தடுப்பூசி போதுமானதாக இல்லாத காரணத்தில் மூன்றாம் அலை மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் கொரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் கொரோனா 3ம் ஆலை இந்த ஜூலை மாதம் 4ம் திகதி தொடங்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவிக்கின்றனர். 2ம் அலை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கியது. அதன் பாதிப்பு மார்ச் இறுதியில் வெளிப்பட்டது. அது போன்று 3ம் அலை ஜூலையில் தொடங்கியது. ஆகஸ்டில் பாதிப்பு வெளிப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

ஆய்வு ஒன்றில் 3ம் அலை முந்தைய 2ம் அலையைக் காட்டிலும் 1.7 மடங்கு ஆபத்தானதாக, கொடியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆகஸ்டில் அதிகரிக்கத் தொடங்கும் 3ம் அலை செப்டம்பரில் உச்சத்தைத் தொடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3ம் அலையைத் தடுக்க பொது மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி போடப்பட வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா நோயாளி என சந்தேகம் வந்தால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொது மக்களும் சமூக இடைவெளி, இரட்டை மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதைக் கடமையாகப் பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் 3ம் அலை மிகக் கொடியதாக மாறுவதற்கான வாய்ப்பு குறையும்.

அதே நேரத்தில் மாநில அரசுகள் போதுமான அளவில் மாத்திரை – மருந்து, ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்பைக் குறைக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *