நாம் சர்வதேச உதவியை நாடினால் அது நாட்டு மக்களையே பாதிக்கும்!

நாம் சர்வதேச உதவியை நாடினால் அது நாட்டு மக்களையே பாதிக்கும் என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் விளக்கம் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தாலும் தனது புதல்வி ஹிருணிகாவாலும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதிலில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தத்துக்காவது ஜனாதிபதி விரைவில் பதில் அனுப்புவார் என நினைக்கிறேன்.

துமிந்தவின் விடுதலையின் பின்னர் பல சமூக அமைப்புகள் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் என்பன எம்முடன் கதைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறீர்கள் என வினவுகின்றனர் என்றார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=3417100113&adf=3008535365&pi=t.aa~a.3987527503~i.7~rp.4&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1625297293&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7505841888&psa=1&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fthe-people-of-sri-lanka-are-affected-1625271848&flash=0&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1625297292146&bpp=22&bdt=5433&idt=23&shv=r20210630&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dcd439c371cbe52e1-22f9113623ca0086%3AT%3D1625297291%3ART%3D1625297291%3AS%3DALNI_MY88YixhPKpR3HG3FoUW0wyAXVh_A&prev_fmts=0x0%2C336x0%2C336x0&nras=2&correlator=8013001513742&frm=20&pv=1&ga_vid=446995190.1622722268&ga_sid=1625297290&ga_hid=67089438&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=970&biw=412&bih=787&scr_x=0&scr_y=101&eid=31060972%2C31060474%2C31061662%2C31061684&oid=3&pvsid=438234814412675&pem=990&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&xpc=Y5gcC3FozX&p=https%3A//tamilwin.com&dtd=1819

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கொஞ்சம் நாம் சிந்திக்கின்றோம். சில சம்பவங்களால் நாட்டுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாமும் இந்த சம்பவத்துடன் சர்வதேசத்தக்குச் சென்றால் இப்போது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஜி. எஸ்.பி.பிளஸ் சலுகை கடன் பிரிச்சினைகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம்.

அவ்வாறான பாதிப்பொன்று ஏற்படுமாயின். அதனை அனுபவிக்க போவது இலங்கை மக்களே தவிர இலங்கை ஜனாதிபதியோ அவர் சார்ந்தவர்களோ இல்லை. எனவே இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாம் சரியான முடிவுக்கு இதுவரை வரவில்லை .

“இதேவேளை துமிந்தவின் பொது மன்னிப்புடன் தனக்கும் தனது மகளுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏதாவது அழுத்தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாலம் அவ்வாறு ஏற்பட்டால் ஜனாதிபதியே அதற்கு பொறுப்பு கூற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *