இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்வி!

இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தது..

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 73 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 54 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி சார்பில் Chris Woakes 4 விக்கெட்டுக்களையும், David Willey 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, 186 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில்  5விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இங்கிலாந்து அணி சார்பில், Joe Root ஆட்டமிழக்காது 79  ஓட்டங்களையும், Jonny Bairstow 43 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் Dushmantha Chameera 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *