கொரோனா தடுப்பூசி போட்ட பின் கையில் வலி ஏற்பட காரணம் என்ன?



பொதுவகா தடுப்பூசி போட்டுக்கொண்டாலே கைகளில் வீக்கம், வலி உண்டாவது சகஜம். அப்படி கொரோனா தடுப்பூசி போட்டதும் வலி ஏன் உண்டாகிறது என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு.

கொரோனா தடுப்பூசி போட்டதும் போட்ட இடத்தில் வலி உண்டாகும். ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் அடுத்த நாள் கைகளை தூக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும்.

வலி உண்டாவதற்கு காரணம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாது தடுப்பூசியுடன் செயலாற்றுகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி கைகளில் வலி , காய்ச்சல் உண்டாகிறது எனில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு வேலை செய்கிறது.

போடப்பட்ட ஊசி உடலில் வேலை செய்கிறது என்று அர்த்தம். மேலும், தடுப்பூசிகள் வைரஸின் பிரதிபலிப்பாகும். எனவே, இது உடலில் செலுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு பதிலளித்து உடலை நோய்க்கிருமியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறது.

தடுப்பூசி போட்ட பிறகு இரண்டு நாட்கள் கைகளில் வலி, விக்கம் இருப்பது சாதாரண விஷயம்தான். எனவே அதனால் பயப்படத் தேவையில்லை. அவ்வாறு வலி இருக்கும்போது இலகுவாக இருக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் சீராகி வீக்கத்தை குறைக்கலாம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *