மும்தாஜின் உடல் முதலில் அடக்கம் செய்தது புர்ஹான்பூரில்!

முகலாய மன்னர் ஷாஜகானின் அன்புக்குரிய மனைவி மும்தாஜ் மஹால் பிரசவத்திற்க்காக ஆக்ரா நகரிலிருந்து 800 km தொலைவில்லுள்ள புர்ஹான்பூர் எனும் ஊரில் (தற்போது இவ்வூர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கிறது) தங்கியிருக்கும் போது பிரசவ வலியில் மரணமடைந்தார்.

மனைவியின் இறப்பு செய்தி ஷாஜகானுக்கு கிடைக்கும் முன்னே மும்தாஜின் உடல் பர்ஹான்பூரில் அடக்கம் செய்ப்பட்டது. அங்கே நினைவு மண்டபம் கட்டப்பட்டது, இது தான் மும்தாஜ் மஹாலுக்கு முதலில் கட்டப்பட்ட தாஜ் மஹால்.

மனைவி இறந்த ஆறுமாத காலத்தில் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் தாஜ் மஹாலுக்கு இடத்தை தேர்வு செய்தார் ஷாஜகான்.
அப்போது கூட தாஜ் மஹாலுக்கு அஸ்திவாரம் போடப்படவில்லை.! ஆனாலும் புர்ஹான்பூரில் புதைக்கப்பட்ட மும்தாஜின் உடலை எடுத்து தற்போது தாஜ்மகாலின் வளாகத்தில் இருக்கும் தோட்டத்தில் தற்காலிகமாக இரண்டாவது முறையாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது!

தாஜ் மஹால் மண்டபத்தின் நீள அகல வரைபட திட்டம் உறுதி செய்யப்பட்ட பின்னர், தற்காலிகமாக புதைத்த இடத்திலிருந்து மீண்டும், தற்போது இருக்கும் மும்தாஜ் கல்லறையில் மூன்றாவது முறையாக புதைக்கப்பட்டார் மும்தாஜ்.!

தற்போது இந்த கல்லறை தாஜ்மகாலின் கீழ் தளத்தில் உள்ளது. அருகே ஷாஜகான் கல்லறையும் உள்ளது.

தாஜ் மஹாலின் மேல் தளத்தில் மும்தாஜ்க்கும் ஷாஜகானுக்கும் கல்லறை இருக்கிறது. இது பார்வைக்கு வைக்கப்பட்ட (Dummy Tombs ) போலி கல்லறைகள்!!

உலக அதிசயங்களுள் ஒன்றான இந்த தாஜ்மகாலை காண வருடத்திற்கு ஏழுபது லட்சம் பார்வையாளர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வருகை புரிகிறார்கள் என யுனெஸ்கோ நிறுவம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *