அணிக்கு மீண்டும் வருவேன் ஆனால் 2 கி.மீ. ஓட முடியாது!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தேர்வு முறை குறித்து தனது விசனத்தை வெளியிட்டுள்ளதுடன் அணிக்கு தன்னால் திரும்ப முடியும் எனும் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

2017 சம்பியன்ஷிப் கிண்ணத்துக்கு பிறகு, எனக்கும் குலசேகரவுக்கும் ஒரு சிக்கல் இருந்தது. நான் போட்ட பந்துக்கான பிடியை வேறு யாரோ தவறவிட்டார்கள், என் வயிறு அதிகமாக இருக்கிறது என்றும் என்மீதும் அப்போது குற்றசாட்டை முன்வைத்தனர். தொப்பை அதிகமாவதால்தான் பிடிகள் நழுவுகின்றன என்றும் முடித்தனர்.

பின்னர் சுமார் 40 வீரர்களைக் கொண்டுவந்த ஒரு போட்டி வைத்தனர். இது 20 மீற்றர் கொண்டது மற்றும் யார் வேகமாக ஓடுகிறார் என்று பார்த்தனர். அதிலே 36 வயதான குலசேகரதான் முதலிடம்.

ஆனால் அந்த சோதனையில் உள்ள 40 பேரில் மூத்தவர் குலசேகரத்தான். எனக்கு இரண்டாவது இடம் .

இப்போதெல்லாம், ஒரு உடற்பயிற்சி சோதனை செய்யப்படும்போது, ​​அவர்கள் வீரருக்கு முன் ஊடகங்களுக்குச் சொல்கிறார்கள். ஆனால் அந்த நாட்களில் இது யாருக்கும் தெரியாது. எங்கள் உடற்பயிற்சி முடிவுகளை குறைந்தபட்சம் பேஸ்புக்கில் இட நாங்கள் அனுமதிக்கவில்லை.

இப்போது 2 கி.மீ சோதனை நடக்கிறது. என்னால் சுமார் 2 மணி நேரம் பந்து வீச முடியும். இருபதுக்கு இருபது போட்டியாக இருந்தால் என்னால் 24 பந்துகளையும் விக்கெட்டுக்கு நேராகவே வீசலாம். ஆனால் 2 கி.மீ சோதனை சாத்தியமில்லாததால், யாரையும் தொந்தரவு செய்யாமல் வீட்டில் தங்கியிருக்கிறேன் என்று மாலிங்க தெரிவித்தார்.

2019 நியூசிலாந்திற்கு எதிராக பல்லேகலவில் நடந்த போட்டியில் 4 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை நான் எடுத்தேன், மலிங்காவின் வயிறு அதிகம் என்று அப்போது யாரும் கூறவில்லை. எனது உடல்தகுதி பற்றி நான் நன்கறிவேன். ஆனால் இப்போதைய தேர்வுக்குழு சொல்வது போன்றெல்லாம் என்னால் 2கி.மீற்றர் சோதனையில் என்னால் தேற முடியாது என்பதனால், நான் அமைதியாக இருக்கிறேன் என்று மாலிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் இலங்கை வீரர் ரசல் ஆர்னோல்ட்டுடன் இடம்பெற்ற யூடியூப் நேர்காணலில் மாலிங்க இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *