அபூர்வ இனமான பன்றிமூக்குத் தவளை!

கேரளாவில் வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதன்படி ,பர்ப்பிள் தவளை எனப்படும், பன்றி மூக்கு தவளை இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்யும் இத்தவளைகள் சில நாட்களில் மீண்டும் பூமிக்குள் சென்று விடும். பெரிய உடம்பு, சிறிய கால்கள், சிறிய தலை, உதடுகளை உடைய இந்த தவளை 170 கிராம் எடையும், 6 முதல் 9 சென்டி மீட்டர் நீளமும் கொண்டது.

மேலும் ,பூமிக்கடியில் உள்ள புழு, பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உணவாக்கி கொள்ளும் தன்மை உடையது. இந்த இன தவளைகளை பாதுகாக்க, மாநில தவளையாக அறிவிக்க வேண்டுமென கேரள வனத்துறை அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *