பொலனறுவையில் அரிசி வணிகர் வாங்கிய 11 கோடி ரூபா உலங்குவானூர்தி!

பொலனறுவையில் ஒரு முன்னணி அரிசி வணிகர் ஒருவர் உலங்குவானூர்தியொன்றினை கொள்வனவு செய்துள்ளதாக Aruna பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

அரிசி வியாபாரத்தில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள வணிகர் பயணத் தேவைகளுக்காக சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. 110 மில்லியனுக்கு வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குராகொடா விமானப்படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உலங்குவானூர்திக்கு ஒரு பொறியியலாளர் மற்றும் ஒரு விமானியையும் அவர் பணியில் அமர்த்தியுள்ளார்.

அவர் இந்த உலங்குவானூர்தி மூலம் திருமண போக்குவரத்து வசதிகள். மருத்துவ சிகிச்சை, தனது தனிப்பட்ட பயணத்திற்கான பயண வசதிகள். சரக்கு மற்றும் உல்லாசப் பயணங்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *