வட மாகாண சபைக்கு புதிய கீதம் அறிமுகம்! – இறுதி அமர்விலேயே அது கைகூடியது
வடக்கு மாகாண சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் நேற்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்குச் சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
நேற்று முற்பகல் 10 மணியளவில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடிய மாகாண
சவையில், வடக்கு மாகாணத்தின் கீதம் சபை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் மாகாண கீதமும் இசைக்கப்பட்டது.
மாகாண கீதம், இலங்கையின் தேசிய கீதம் போன்று இருமொழிகளில் இருக்கவேண்டும் என்று உறுப்பினர் ஜெயதிலக விடுத்த கோரிக்கையும் நேற்று அமர்வில் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.