லொக்டவுன் காலத்தில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள்!

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரிட்டனில் இருக்கும் இளைஞர்கள் ஆபாச படங்களை பார்த்திருப்பதாக மீடியா ரெகுலேட்டர் அப்கொம் (media regulator Ofcom) தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி ,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு கடுமையான ஊரங்கு கட்டுப்பாடுகள் பிரிட்டனில் போடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் வீட்டில் முடங்கியிருந்த இளைஞர்கள் வீடியோ கேம் மற்றும் ஒன்லைனில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர்.

இதுகுறித்த டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் (media regulator Ofcom), பிரிட்டனில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வெப்சைட்கள் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.

அதற்கமைய ,செப்டம்பர் 2020இல் மட்டும் இங்கிலாந்தைச் சேர்ந்த 26 மில்லியன் பேர் ஆபாச வெப்சைட்கள் மற்றும் செயலிகளை பார்த்துள்ளனர். அதில், நான்கில் 3 பகுதியினர் பருவ வயது இளைஞர்கள் என தெரிவித்துள்ளது.

இந்த புள்ளவிவரத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, பிரிட்டனில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் அந்தப் படங்களை பார்த்துள்ளனர். இளைஞர்கள் மட்டுமே அந்தப் படங்கள் இருக்கும் தளங்களையும், செயலிகளையும் உபயோகப்படுத்தவில்லை. பெண்களும் பார்த்துள்ளனர். media regulator Ofcom சேகரித்துள்ள தரவுகளின்படி 16 விழுக்காடு இங்கிலாந்து பெண்கள் ஆபாச வெப்சைட் மற்றும் செயலிகளுக்கு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *