இலங்கையில் விலங்குகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு!

இலங்கையின் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளின் பிறப்பு வீதம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக விலங்கியல் பூங்காக்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையை நிறுத்தியமையால் விலங்குகள் சுதந்திரமாகவும் மன அழுத்தமின்றியும் வாழ முடிவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களப் பணிப்பாளர் இஷானி விக்கிரமசிங்க தெரிவித்ததாக ‘Without humans around Sri Lankas enjoy a pandemic baby boom’ என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸ் இதழில் ஆன்யா விபுலசேன என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன் நாட்டில் பிரசவிக்காத விலங்குகளும் குட்டிகளை ஈன்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மட்டும் சுமார் 4000 வகையான விலங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *