கடவுச்சீட்டு இலக்கத்துடன் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாட்டுப் பயணம்?

உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் அவதிப்பட்டது. அதில் இருந்து ஒவ்வொரு நாடுகளும் மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பின. இந்த நிலையில்தான் 2-வது அலை வீறுகொண்டு சூறாவளியாக வீசிவருகிறது.

அதோடுமட்டமல்ல ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. இதனால் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

சில நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தினால்தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன. பாஸ்போர்ட் எண்ணுடன் கொரோனா தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.இதனால் இனி வரும் காலங்களில் தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்கள் மாத்திரம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று வேலைபார்க்கும், படிக்கும் நபர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள அரசு பாஸ்போர்ட் நம்பருடன் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. படிப்பு மற்றும் வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் நபர்களுக்கு தேவை என்றால் அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *