இலங்கையில் ஆட்சி செய்த நாக மன்னர்கள்!

இன்றைய யாழ்ப்பாணம் முன்னர் நாகநாடு/ நாகபூமி/ நாகதீவு என்றே அழைக்கப்பட்டது. இந்த நாகநாட்டினை அரசாண்ட நாக அரசர்கள் இருவருக்கிடையில் ( மகோதரன்-குலோதரன்) நடந்த சண்டையினை புத்தர் தலையிட்டு தடுத்ததாக மகாவம்சம் கூறுகின்றது இதன் நம்பகத்தன்மையினை கூட்டும் முகமாக இதே நிகழ்வு மணிமேகலையிலும் கூறப்படுகின்றது.

கீழ்நிலை மருங்கில் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித்தோன்றி…

இங்கு புத்தரிற்குப் பதில் துறவி (“பெருந்தவ முனிவன்”) எனக் கூறப்பட்டபோதும், இரு நாக அரசர்கள் சண்டையிட்டுக்கொண்ட செய்தி பொதுவாக உள்ளது. மேலும் மணிமேகலை குறிப்பிடும் இடங்கள் {நயினாத் தீவு (மணிபல்லவத் தீவு) ,கந்தரோடை (தீவதிலகை)} மூலம் அந்த நாக அரசர்கள் ஆண்ட பகுதி இன்றைய யாழே என்பது புலனாகும். மேலும் சிலப்பதிகாரமானது சேரனை விடச் சிறப்பாக நாக அரசர் (நாக நாட்டினை)அரசாண்டதாகக் கூறுகின்றது. {`நாகநீள் நகரொடு நாகநாடு… சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துக் காதை}. இதை எல்லாவற்றையும் விட நாக அரசர்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு

மேலும் மணிமேகலையில் நாகநாட்டினை அரசாண்ட வலைவாணன் என்பவன் (வடிவேற்கிள்ளி என்ற சோழ அரசன் மணந்த பீலிவளை என்ற இளவரசியின் தந்தை) பற்றியும் குறிப்பிடுகின்றது (மணிமேகலை 14ம் காதை). நாக நாட்டினை அரசாண்ட மகோதரன் பற்றிய குறிப்பும் மணிமேகலையில் உண்டு (மணிமேகலை 8-54).
மேலும் சில நாக அரசர்களைப் பார்ப்போம்.
முடிநாகர் எனும் நாக அரசன் விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கையினை ஆண்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. {செந்தமிழ், ஈழமும் தமிழ் சங்கமும் – ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை}.
இங்கு முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவரே புறநானூறு 2 பாடலைப் பாடியவர்.
மகோதரன் : நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு முன்பே நாகநாடான இலங்கையை ஆண்ட மன்னனின் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
மலையராட்டிர நாகராசன்: நாகராசன் என்னும் மன்னனின் மகளை மணந்தவன். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான்.
இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். இவர்கள் நாகர் பழங்குடிகளாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. *வசபன் .CE 66 – 110

  • வங்கனசிக திச்சன் . CE 110 -113

முதலாம் கசபாகு. CE 113 – 135

மகல்லக்க நாகன் . CE 135 – 141

பதிக திச்சன். CE 141 – 165

கனித்த திச்சன் . CE 165 – 193

குச்சநாகன். CE 193 – 195

குஞ்சநாகன் . CE 195 – 196

முதலாம் சிறிநாகன். CE 196 – 215

ஒகாரிக திச்சன் . CE 215 – 237

அபயநாகன். CE 237 – 245

இரண்டாம் சிறிநாகன். CE 245 – 247

விசயகுமாரன் . CE 247 – 248

முதலாம் சங்க திச்சன் . CE 248 – 252

சிறிகங்கபோதி . CE 252 – 254

கோதாபயன். CE 254 – 267

முதலாம் சேட்டதிச்சன். CE 267 – 277

மகாசேனன் CE 277 – 304

சிறிமேகவண்ணன் CE 304 – 332

இரண்டாம் சேட்டதிச்சன் CE 332 – 341

புத்ததாசன். CE 341 – 370

உபதிச்சன்.CE 370 – 410

மகாநாமன் . CE 410 -428

மித்தசேனன் . CE 428 – 429

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *