முகக்கவசம் அணிந்து வந்தால் மாத்திரம் மது விற்பனை!

டாஸ்மாக் கடைகள் இன்று முதல் இரவு 9 மணியுடன் மூடப்படும். முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை  செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி  வரை மட்டுமே மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும். கடைகளில் எந்த ஒரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது. இரண்டு  வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல்  இருக்கக்கூடாது.

மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்யவும், முகக்கவசம் அணிந்து வர செய்யும் பணியில் 2 பணியாளர்கள் ஈடுபட வேண்டும்.  மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது. கடையில் அதிக கூட்டம் சேராமலும், பொது இடங்களில் மது அருந்துவதை  தடை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும். முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும்.  குறைந்தது 50 வட்டங்கள் கடையின் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகம் தெரிவித்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும்  மாவட்ட மேலாளர்கள் மீது சஸ்பென்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *