ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் இலங்கை வீரர் திசார பெரேரா சாதனை!

31 வயது திசாரா பெரேரா 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். 

எஸ்.எல்.சி. மேஜர் கிளப் போட்டியில் இலங்கை இராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பாக விளையாடிய பெரேரா, புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். 

முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட வீரரான தில்ஹன் கூரே வீசிய ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் பெரேரா. இதனால் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற பெருமை பெரேராவுக்குக் கிடைத்துள்ளது. மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த 2 வது வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். 

பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் விடியோவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *