பசறை விபத்துக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டனர்!

சாரதியினால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமையே, பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்திற்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், இந்த விபத்து தொடர்பில் தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மோட்டார் வாகன பரிசோதகர்களினால் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் விபத்தொன்றை தவிர்த்துக்கொள்ளுதல், சாரதியின் பொறுப்பு என மோட்டார் வாகன சட்டத்தின் சரத்துக்களில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, பஸ் சாரதி ஆசனத்தில் உயிரிழந்த நிலையில், ஒருவர் சிக்குண்டிருந்ததாகவும், அவர் சாரதி என முன்னர் தெரிவிக்கப்பட்டதாகவும் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

எனினும், பின்னரான விசாரணைகளில், சாரதி காயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் பதுளை போதனா வைத்தியசாலை மற்றும் பசறை மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னரே சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *