ஜப்பானில் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

ஜப்பான் நாட்டு தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் 3,60,000 நபர்களுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு அமைச்சின் ஊடான நடவடிக்கைகள் இவ் வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். இதற்கு இணைவாக கனடா நாட்டு தூதரகத்தின் மூலமாக தொழில்வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்கான  நிபந்தனைகள் மூலமான பத்திர நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான செயற்றிட்டங்களும் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்தன தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு,மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எற்பாட்டில் யாழில் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜப்பான்,பொலாந்த,ரூபானியா,கொரியா துருக்கி, ஆகிய நாடுகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொண்டு தொழில்சார்ந்த தகமைகளுடாக சிறந்தொரு தொழில்வாய்ப்பு கட்டமைப்பினை பெற்றுக்கொள்ளமுடியும்.

யாழ். மாவட்டத்தில் முதல்முறையாக வடமாகாணத்திற்கான பிரதி வேலைவாய்ப்பு கிளை அலுவகத்தினை இளைஞர், யுவதிகளுக்காக திறந்து வைக்கின்றேன். இந்த நிறுவனத்தின் ஊடாக இளைஞர்,யுவதிகள் தொழில்வாய்ப்புக்காக புலம்பெயர்ந்த நாடுகளின் சென்று தமது தொழிலினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு காரணத்திற்காகவோ வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுவதற்காக கொழும்புக்கு வந்து செல்லவேண்டியது அவசியம் இல்லை.

வடமாகாணத்தில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகள் தமது விண்ணப்பங்களையும், அதற்கான ஆலோசணை வழிகாட்டலையும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புதிய அலுவகத்தில் பெற்றுக்கொள்ளாம்.

கிராமம் மூலமாக சென்று அதற்கான இளைஞர்,யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல் நடைமுறையினை செயற்படுத்த முன்வர வேண்டும். வடமாகாணத்தில் இருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு உறுதி செய்யப்படும் போது மொழிப் பயிற்சியும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *