100 அடி நீளம் 18 அடி அகலம் கொண்ட ராட்சத படகு வீடு!

கண்ணூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ராட்சத படகு வீடு இன்று பரசினிக்கடவு ஆற்றில் இயக்கப்படுகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ‘ஜலாரணி’ என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய படகு வீடு பரசினிக்கடவு ஆற்றில் நேற்று முதல் இயங்க தொடங்கியது. 6 படகு ஓட்டுநர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழு இந்த படகை ஏற்பாடு செய்து இயக்குகிறது. பரசினிக்கடவில் படகு ஓட்டுநர்கள் குழுவான நன்மை சுற்றுலா படகு கிளப்பின் தலைமையில் ரூ1 கோடி செலவில், 100 அடி நீளம், 18 அடி அகலம் கொண்ட இந்த பிரமாண்ட படகு வீடு கட்டப்பட்டுள்ளது. சுதேஷ் தரிசன் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மலநாடு மலபார் ரிவர் குரூஸ் சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் படகு ஓட்டுநர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இளைஞர்களால் நன்மை சுற்றுலா கிளப் தொடங்கப்பட்டது.

மாநிலத்தில் 2வது பெரிய ‘வாட்டர் டாக்ஸி’ திட்டம் கொண்டு வரவும் இந்த கிளப் முயன்று வருகிறது. இந்த கிளப்பின் தலைமையின் கீழ்தான் இந்த பெரிய படகு வீடு கட்டும் முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக உரிமம் பெற்று ஓராண்டில் படகு வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்த பெரிய படகு வீட்டில் 96 பேர் அமர முடியும். தட்டையான அடிப்பகுதியுடன் இந்த படகு வீடு ஒரு சங்கிலி மாதிரிபோல கட்டப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *