விளம்பர படங்களில் கடிகாரங்களில் நேரம் 10:10 என எதற்காக காட்டப்படுகிறது?

கைகடிகார மற்றும் 🕰 சுவர் கடிகார விளம்பர படங்களில் நேரம் 10:10 என காட்டப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?

1).ஆப்ரகாம் லிங்கன் சுடப்பட்ட நேரம் 10:10 என்றும் எனவேதான் அப்படி காட்டப்படுகிறது என சிலர் சொல்கிறார்கள்.

2.)இரு முட்களும் ஒன்றன் மீது ஒன்று இல்லாமல் இருப்பதற்காக இந்த நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என சிலர் சொல்கின்றனர்.

3) நேரம் 10:10 ஐ காட்டும்போது இரு முட்களும் “V” என VICTORY ஐ காட்டுவதால் இந்நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என சொல்வோரும் உண்டு.

4) இப்படி 10:10 இல் முட்கள் நிற்கும்போது கடிகாரத்தில் எழுதப்பட்டிருக்கும் கடிகார தயாரிப்பு கம்பெனியின் பெயர் முழுமையாக தெரிவதாலும் கிழமை மற்றும் தேதியினை காட்டும் விவரங்கள் மறைக்கப்படாது என்பதாலேயே இந்நேரம் காட்டப்படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

5) கடிகாரத்தை சரி செய்யும் மெக்கானிக்குகளுக்கு முட்கள் இப்படி 10:10 இல் நிறுத்தி வைத்தால் அவர்களுக்கு தேவையான சமன்பாடு (BALANCE) கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

6) கடிகாரத்தில் ஒலிக்கும் மணி “டன் டன்” என ஒலிப்பதால் TEN TEN இற்கு முட்கள் காட்டப்படுகின்றன என கூறும் அறிவாளிகளும் உண்டு. உண்மை காரணம் என்னவோ?

7) கடிகாரத்தின் முட்கள் 10:10 இல் இருக்கும்போது சிரிப்பதுபோல்
(Smily face) உணர்வு தருவதாக இருப்பதால் என சிலர் சொல்வதுண்டு.

8)கை கடிகாரத்தை கண்டுபிடித்தவர் இறந்த நேரம் என்றும் சிலர்
சொல்வதுண்டு.

👆➡இப்படி பல காரணங்கள் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *