கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு காலம் மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்த முடியும்!

கொறோணா தொற்று உள்ளவர்கள் அல்லது கொறோணா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு காலம் மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்த முடியும்.

இன்று மக்களிடம் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை இதன் தாக்கம் எவ்வளவு காலம் இருக்கும் என்பது. இதனுடன் தொடர்புடைய இரண்டு சொற்பதங்களை தெரிந்து கொண்டால் இதனை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.1. நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி (Incubation period) - ஒருவரினுடைய உடலில் நோய்க்காரணி (இங்கு கொறோணா வைரஸ்) உட்புகுந்ததில் இருந்து நோய் அறிகுறிகள் ஆரம்பிக்கும் வரைக்கும் உள்ள காலப்பகுதி. 2.தொற்றும் காலப் பகுதி (Infectious period) - அதாவது ஒருவரினுடைய உடலினுள் நோய்க்காரணி சென்று அவர் முற்றாக குணமடையும் காலப்பகுதியினுள் எந்தக் காலப்பகுதியில் அவரால் மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்த முடியும்.

ஒவ்வொரு கிருமிகளுக்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், தொற்றை ஏற்படுத்துவதற்கான காலம் என்பன வேறுபடும்.

Covid-19 virus தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தோன்றுவதற்கான சராசரியான காலப்பகுதி 4 தொடக்கம் 5 நாட்கள். இதன் விசேட இயல்பு என்னவென்றால் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே மற்றவர்களுக்கு தொற்ற ஆரம்பித்து விடும் அதுதான் இங்கு ஆபத்தானதும் கூட. அதேநேரம் இதைவிடவும் கொடிய வைரஸான Ebola வைரஸ் நோய் அறிகுறிகள் தோன்றிய காலப்பகுதியில் இருந்து அவர் குணமடையும்வரை அல்லது அந்த நோயால் இறக்கும்வரை தொற்றை ஏற்படுத்தும்.

கொறோணா வைரஸின் தொற்றும் காலப் பகுதியும் தனிமைப்படுத்துதலும் (Infectious period of Covid-19 and Isolation) –
1.எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத ஒருவருக்கு RT-PCR உறுதிப்படுத்தப்பட்ட நாளில் இருந்து 10 நாட்கள் அல்லது அதைவிடவும் குறைவான நாட்கள். 10 நாட்களுக்கு மேலாக தனிமைப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
2.இலேசான, நடுத்தரமான அறிகுறிகள் உள்ளவர்கள் (Mild to moderate symptoms) – அறிகுறிகள் ஆரம்பித்ததில் இருந்து 10 நாட்கள் அல்லது அதற்கு உட்பட்ட காலப்பகுதி அத்தோடு 24 மணித்தியாலங்களுக்கு குறைவில்லாத காலப்பகுதியில் காய்ச்சலுக்கு உரிய மாத்திரைகள் (Panadol/Paracetamol) எதுவும் பாவிக்காமவ் காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.
3.கடுமையான அறிகுறிகள் (Severe symptoms) உள்ளவர்கள் – இங்கு வைரஸின் ஆதிக்கம் சற்று கூடுதலாக இருப்பதனால் அறிகுறிகள் தோன்றியதில் இருந்து 20 நாட்கள் வரை தொற்றும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவர்களை 20 நாட்கள் வரை தனிமைப்படுத்த வேண்டும்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு 10 நாட்களின் பிறகு RT-PCR பரிசோதனை செய்து மீண்டும் உறுதி செய்யவேண்டிய கட்டாயம் இல்லை.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.cdc.gov/coronavirus/2019-ncov/hcp/duration-isolation.html&ved=2ahUKEwj3pYr96u_tAhVJwAIHHaJ1DaYQFjAGegQIPRAB&usg=AOvVaw30nV4IoTW95hRWCB3JyfLS&cshid=1609132654616

நமது நாட்டில் மேலதிகமாக 4 நாட்கள் அதாவது 14 நாட்கள் வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தி (Hospital Isolation) அல்லது தனிமைப்படுத்தும் இடங்களில் (Quarantine center) தனிமைப்படுத்தி அதன் பிறகு RT-PCR செய்யப்பட்டு வைரஸ் தற்போது இல்லை என்று அறிவிக்கப்பட்ட ஒருவரால் இன்னும் ஒருவருக்கு தொற்றை ஏற்படுத்த முடியாது. பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பாதிப்படையவைப்பது மிகவும் வருந்தத்தக்க விடயம்.

அதேநேரம் Antigen test இல் வைரஸ் இல்லை என்று உறுதியானவர்கள் அல்லது test செய்யப்படாதவர்கள் வைரஸை கொண்டு இருக்க வாய்ப்புகள் உள்ளன ஆதலால் நீங்கள் எடுக்க வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களைவிட மற்றவர்களிடம்தான் மிகவும் கடுமையாக பேணவேண்டும்.

மற்ற நாடுகளில் கொறோணாவினால் பாதிக்கப்பட்டவர்களை சாதாரண நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள், மதிக்கிறார்கள், மருத்துவமளிக்கிறார்கள், இறந்தவர்களினுடைய இறுதிக்கிரியைகளையும் செய்கிறார்கள் ஆனால் நமது நாட்டில் எல்லாம் தலைகீழாக நடைபெறுகின்றன அதேபோன்றுதான் நம்மில் சிலரும் நடந்து கொள்கிறார்கள்.

Dr. Anpudeen Yoonus Lebbe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *