இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. 

அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் சந்திமால் 85 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் புதுமுக வீரரான லுதோ சிபம்லா 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 

பதிலுக்கு தனது முதலாவது இன்னிஸ்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 621 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது 

தென்னாபிரிக்கா அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டூ ப்ளஸ்ஸிஸ் 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் வனிது ஹசரங்க 4 விக்கெட்களையும், விஷ்வ பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர். 

அதன்படி, இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரப்பத்தில் இலங்கை அணியை விட தென்னாபிரிக்கா அணி 225 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. 

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

தனஞ்சய டி சில்வாவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால விளையாட முடியாமல் போனதன் காரணமாக தென்னாபிரிக்கா போட்டியில் வெற்றிபெற்றது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 59 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

பந்து வீச்சில் லுதோ சிபம்லா 2 விக்கெட்களையும் லுங்கி நிங்கிடி 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். 

அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி 1 இன்னிங்ஸ் 45 ஓட்டங்கள் வித்தியசாத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *