நாளை இரு மாதங்களுக்குப் பிறகு கொழும்பின் சில பகுதிகள் விடுவிப்பு!

நாளை (28) அதிகாலை 5.00 மணி முதல் மருதானை, வாழைத்தோட்டம், டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, குறிப்பாக கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் மருதானை, தெமட்டகொடை உள்ளிட்ட பிரதேசங்களிலும், ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் வாழைத்தோட்டம், டாம் வீதி உள்ளிட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,
கொழும்பு மாவட்டம்
நாளை (28) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் இடங்கள்:
பொலிஸ் பிரிவுகள்
மருதானை
வாழைத்தோட்டம்
டாம் வீதி
கிராமசேவகர் பிரிவுகள்
கொம்பனித்தெரு: வேகந்த
கொம்பனித்தெரு: ஹுணுப்பிட்டி
வெள்ளவத்தை: மயூரா பிளேஸ்
பொரளை: ஹல்கஹவத்த, காளிபுள்ள வத்த