ஒரு ரூபாவுக்கு சாப்பாடு வழங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

கிழக்கு டெல்லி எம்பி தொகுதியில் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் கேன்டீனை திறந்து சாப்பாடு வழங்கி கவுதம் கம்பீர் எம்பி அசத்தியுள்ளார். கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக தேர்தலில் வெற்றி பெற்றவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர். அவர் தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்கள் ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்துள்ளார்.

ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் பிரமாண்டமாகஅமைந்துள்ள இந்த கேன்டீனில் தரமான, சத்தான உணவு வகைகள் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை நேற்று காம்பீர் எம்பி தொடங்கி வைத்தார். அங்கு வந்த மக்களுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்கினார். இந்த திட்டம் பற்றி அவர் கூறியதாவது;

கிழக்கு டெல்லியில் உணவு தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்காக இந்த கேன்டீன் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இதே போல் தொகுதி முழுவதும் கூடுதலாக ஐந்து அல்லது ஆறு கேன்டீன்கள் திறக்கப்படும். அடுத்த கேன்டீன் மயூர் விஹார் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ளது. இங்கு வசூலிக்கும் ஒரு ரூபாய் என்பது கேன்டீனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும்.

என்னைப்பொறுத்தவரை அனைவருக்கும் தரமான, சத்தான உணவு வழங்கப்பட வேண்டும். இதில் மதம், இனம், சாதி அல்லது நிதிச்சூழல் எதுவும் முக்கியம் இல்லை. வீடில்லா மக்கள், ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது.  

அவர்கள் நலனுக்காக, அவர்களும் தரமான உணவு சாப்பிட வசதியாக ஒரு ரூபாய்க்கு ஒரு பிளேட் உணவு இங்கு வழங்கப்படுகிறது. ஒருநாளில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். உணவு தேவைப்படும் நபர்கள் இரண்டாம் முறையாகவும் வந்து வாங்கிக்கொள்ளலாம். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு சமூக விலகல் இங்கு கடைபிடிக்கப்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடலாம். சிறப்பு நாட்களில் அரிசி சாதம், பருப்பு, காய்கறி கூட்டு ஆகியவை இங்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *