பன்றி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா?

சீனாவில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்து குறித்து இஸ்லாமியர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் அதை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர். பன்றி இறைச்சியை சாப்பிடுவது அல்லது அந்த பொருட்களை பயன்படுத்துவது என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பன்றிகளின் தோல்ல, எலும்புகளில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின் என்ற புரத மூலப்பொருளை பயன்படுத்தி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

பன்றி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. மேற்காசிய நாடுகளில் இந்த மருந்தை பயன்படுத்த இஸ்லாமிய அமைப்புக்கள் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதித்துள்ளன. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள், பன்றியின் புரதத்தை கொண்ட சீன தடுப்பூசி இஸ்லாமியர்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியது என தெரிவித்துள்ளது.

ரசா அகாடமியின் பொது செயலாளர் சயீத் நூரி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், ‘பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சீனா தடுப்பூசியை அரசு பயன்படுத்தக் கூடாது. எந்த தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து வாங்கினாலோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலோ அவற்றில் கலக்கப்ட்டுள்ள மூலப்பொருட்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என அறிவிக்க முடியும்,’ என கூறியுள்ளார்.

  • மருந்தாக பார்க்க வேண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பத்வா கவுன்சில் அனுமதி
    மேற்காசிய நாடானா ஐக்கிய அரபு எமிரேட்சில், ‘பத்வா கவுன்சில்’ எனப்படும் அதிகாரமிக்க இஸ்லாமிய ஆணையமானது, பன்றியின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பன்றிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் மூலப்பொருளை கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் போ ட்டுக் கொள்ளலாம்,’ என அது அறிவித்துள்ளது. இது குறித்து பத்வா கவுன்சில் தலைவர் ஷேக் அப்துல்லா பின் பேயா கூறுகையில், “இதற்கு மாற்று வழிகள் எதுவும் கிடையாது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனித உடலை பாதுகாப்பதற்கான தேவை அதிகமாக இருப்பதால், இது பன்றி இறைச்சி மீதான இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாது. இந்த இடத்தில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின், மருந்தாகதான் கருதப்படுகின்றது. உணவாக கிடையாது,’’ என்றார்.
  • பசு ரத்தத்தில் இருந்து தயாரித்த மருந்தை பயன்படுத்தக் கூடாது
    அகில பாரத் இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் கூறுகையில், “அமெரிக்காவில் பசுவின் ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது. இது, இந்துக்களின் மதத்தை அழிப்பதற்கான ஒரு சர்வதேச சதியாகும். பசுக்களின் சிறுநீர் அல்லது சாணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்தை இந்துக்கள் பயன்படுத்தலாம்,” என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *