தேரர்களுக்கிடையில் நடந்த போட்டியில் ரத்ன தேரருக்கு வெற்றி!
ஞானசார தேரோவுக்கும், அதுரலிய ரத்ன தேரோவுக்கும் இடையே நடந்த தேசியப்பட்டியல் இழுபறியில் இறுதியாக அதுரலிய ரத்ன தேரோ வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல்கள் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் அபே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் எம்பியாக அதுரலிய ரத்ன தேரோ நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UNP இன் தேசிய பட்டியல் எம்பி யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!