03 நாட்களில் 07 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவர் குறைவான நாட்களில் ஏழு கண்டங்களையும் சுற்றி வந்து உலக சாதனை படைத்துள்ளார்.

காவ்லா அல்ரொமைதி என்ற பெண், ஏழு கண்டங்களிலும் பயணம் மேற்கொள்ள 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.

இவரது பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிறைவடைந்துள்ளது. இந்தப் பயணத்தின் போது அவர் 208 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

அவரது சாதனை அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது மிகவும் கடினமாக பயணமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களது நாடும், கலாச்சாரமும் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க நான் விரும்பினேன். அதனால்தான் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தேன்.

பல இடங்களில் பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என சிந்தித்தேன். இதனை செய்து முடிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை தேவை.

அடுத்தடுத்து விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில் விமான நிலையங்களில் காத்திருப்பதற்கும் உங்களுக்கு பொறுமை அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *