15 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட புறா!

பெல்ஜியத்தில் பெண் பந்தயப் புறாவொன்று இலங்கை மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாவுக்கு ($1.9 million) நேற்றைய தினம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2 வயது மட்டுமே ஆன நியூ கிம் (New Kim ) என அழைக்கப்படும் குறித்த புறாவை சீனாவைச் சேர்ந்த நபரொருவரே ஏலத்தில் எடுத்துள்ளார்.

மேலும் , பிரான்சில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு நடுத்தர பந்தயத்தில் நியூ கிம் புறா முதலிடம் பிடித்ததோடு, பெல்ஜியத்தின் சிறந்த இளம் புறா என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *