இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொரோனா கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை9 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 383 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 918 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது