இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் உயிர்ந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 64 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 79,476 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,73,545 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,069 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842  ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,628 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை  54,27,707 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  9,44,996 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 83.84% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.56% ஆக குறைந்துள்ளது.
*  சிகிச்சை பெறுவோர் விகிதம் 14.60% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,32,675 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 7,78,50,403 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 261313 ; குணமடைந்தோர் : 1117720; இறப்பு :  37480

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :46294 ; குணமடைந்தோர் : 552938 ; இறப்பு :  9653

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 26450 ; குணமடைந்தோர் : 253784 ; இறப்பு :  5438
    
கேரளா : சிகிச்சை பெறுவோர் :77564 ; குணமடைந்தோர் :  135144 ; இறப்பு : 791

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 112005; குணமடைந்தோர் :  499506 ; இறப்பு :  9119

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 56897 ; குணமடைந்தோர் : 643993 ; இறப்பு : 5900

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *