கொரோனா அதி வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 67 ஆயிரத்து 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 73,61,205
இந்தியா – 60,74,703
பிரேசில் – 47,48,327
ரஷியா – 11,59,573
கொலம்பியா – 8,18,203
பெரு – 8,08,714
மெக்சிகோ – 7,48,266
ஸ்பெயின் – 7,30,317
அர்ஜெண்டினா – 7,23,132
தென் ஆப்பிரிக்கா – 6,71,669
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
இந்தியா – 50,16,521
அமெரிக்கா – 46,06,908
பிரேசில் – 40,84,182
ரஷியா – 9,45,920
கொலம்பியா – 7,22,536
பெரு – 6,70,989
தென் ஆப்ரிக்கா – 6,04,478
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,09,776
பிரேசில் – 1,42,161
இந்தியா – 95,542
மெக்சிகோ – 76,430
இங்கிலாந்து – 42,001
இத்தாலி – 35,851
பெரு – 32,324
பிரான்ஸ் – 31,808
ஸ்பெயின் – 31,411
ஈரான் – 25,779
கொலம்பியா – 25,641