வங்கிக் கடனால் இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை!

மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள தற்கொலை மரணங்கள்.
வேண்டாம் அன்பின் உறவுகளே!
உங்கள் உயிர்களை வேண்டுமென்றே அழித்து, பல உயிர்களை நடைப்பிணமாக்காதீர்கள். இரு அமைப்புகளில் வாங்கிய இரண்டு இலட்சம் ரூபா கடனைக்கட்ட முடியாமல், கணவர் எட்டு மாதங்களுக்கு முன்பே இவரைப்பிரிந்து சென்று விட்டதால், கணவர் பிரிந்து சென்றதாலும், கடனைக்கட்ட முடியாததாலும் மனவுளைச்சலுக்குள்ளாகி இன்று (29.08.2020) காலை தனது தங்கையின் வீட்டின் யன்னல் கம்பியில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்துள்ளார்.

மேசன் வேலை செய்யும் தனது கணவர் வேலைக்குச் சென்று வருவதற்காக, மோட்டார் சைக்கிளொன்றைப் பெற்றுக்கொடுக்கவே ஒரு அமைப்பில் ஒரு இலட்சம் ரூபா கடன் பெற்று 72000/= ரூபாவுக்கு மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஒரு தடவை மது போதையுடன் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளின் லைசன் இன்சுரன்ஸ் இன்றி ஓட்டிச் செல்லு போது, போக்குவரத்து பொலிசாரால் பிடிக்கப்படு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, 30000/= ரூபா தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்ததால், அதற்கும் தனி நபரிடம் கடன்பட்டு கட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை 50000/= ரூபாவுக்கு விற்று வாங்கிய கடனைக் கொடுத்திருக்கிறார்.

அவ்வாறு தான், அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டெடுக்க மற்றொரு நிறுவனத்தில் ஒரு இலட்சம் ரூபா கடனாகப் பெற்று காலப்போக்கில் அதுவும் முடிந்து போக கணவர் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார்.

ஆறு வயதுடைய மகளும், 15 மாத வயதுடைய ஆண் குழந்தையுடனும் தனியாக இருக்க முடியாமல், அருகாமையிலுள்ள தனது தங்கையின் வீட்டில் பெற்றோரோடு வசித்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பாரிய மனவுளைச்சலுக்குள்ளாகி யாருடனும் சரியாகப்பேசாது யோசித்துக் கொண்டேயிருந்தார் என பெற்றோர் தெரிவித்தனர்.

இன்று (29.08.2020) காலை தனது கைக்குழந்தையை குளிக்க வைத்து, படுக்கையறையில் நித்திரை செய்த பின்னர், அடுத்த அறைக்குள் சென்று துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி இக்குழந்தையின் தாய் மரணித்திருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கௌரவ நீதிபதியின் கட்டளைக்கமைவாக, பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

நன்றி – ஏறாவூர் நஸீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *