வயிற்றில் நீர்க்கட்டி என்று சொன்ன மகள் வைத்தியசாலையில் பிறந்த குழந்தை!சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்குப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளம்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தங்களின் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி கர்ப்பமாயிருக்க முடியும் என ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விவரத்தை மருத்துவமனையில் பெண்ணின் பெற்றோர் தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
புழலைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்குக் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியும் உள்ளார். ஒரு நாள் மதுரவாயல் வழியாகச் சென்றபோது அவரது மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகிப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முன்பு நின்றுள்ளது. அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற லோகேஷ் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த அந்த இளம் பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். தண்ணீரை வாங்கி குடித்த லோகேஷ், அந்த பெண் அழகாக இருப்பதால் அவரிடம் பேச வேண்டும் என முடிவு செய்து தனது மொபைல் எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி  அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் பேசாமல் இருந்துள்ளார்.

இருப்பினும் அந்த பெண்ணிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று முடிவு செய்த லோகேஷ், அடுத்த வாரம் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல தனக்குத் திருமணம் ஆனதை மறைத்து அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய லோகேஷ், உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். இதை அனைத்தையும் உண்மை என நம்பிய அந்த பெண், லோகேஷ் வெளியே அழைத்துச் சென்ற போதெல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவருடன் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார்கள். இது சில நாட்களுக்கு ‘சென்ற நிலையில் திடீரென அந்த பெண்ணோடு பழகுவதை லோகேஷ் தவிர்த்து வந்துள்ளார். இது ஒரு புறமிருக்க லோகேஸும் அந்த பெண்ணும் நெருங்கிப் பழகியதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார். இதுபற்றி லோகேசிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் திருமணத்துக்கு மறுத்த லோகேஷ், கர்ப்பத்தைக் கலைத்து விடுமாறு கூறிவிட்டார். இதனால் வயிற்றில் வளரும் குழந்தை குறித்து தனது பெற்றோரிடம் எதுவும் மூச்சு விடாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து தற்போது குழந்தை பிறந்தபின்பு தங்களது மகள் கர்ப்பமாக இருந்த தகவலே அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. தற்போது லோகேசை கைது செய்த போலீசார் அவருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *