கோட்டாவின் சகாக்கள் நால்வருக்கு அமைச்சு பதவிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி ஆதரவைப்பெற்ற வியத்மக அமைப்பின் உறுப்பினர்கள் நால்வருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் வியத்மக அமைப்பின் சார்பில் 8 பேர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். இருவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

01 – சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

02 – சன்ன ஜயசுமன – மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்.

03- சீதா அரம்பேபொல – திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர்.

04- நாலக்க கொடஹேவா – நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்கள் அகற்றுதல் மற்றும் சமுதாய துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *