கொழும்பு ஜிந்துப்பிட்டித் தெரு கொரோனாவால் மூடப்பட்டுள்ளது !

கொழும்பு – 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பு , ஜந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இவர் கடந்த சில நட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வருகைதந்ததையடுத்து 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *