குடிபோதையில் குறும்பு செய்ததால் காதலியை பலி கொடுத்த காதலன்!

அமெரிக்காவில் குடிபோதையில் ஒரு இளம்பெண் செய்த குறும்பு பெரிய சண்டைக்கு வழிவகுத்ததில், ஒரு இளம்பெண் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மான்ஹாட்டனில் தன் உறவினர் ஒருவரின் காதலரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக Andres Arias (21) என்னும் இளைஞர் தனது காதலியான Erica Lopez (19) என்ற இளம்பெண்ணுடன் சென்றுள்ளார்.

ஹொட்டலில் மொட்டை மாடியில் நடந்த கொண்டாட்டங்களின்போது, அங்கே இருந்த மற்றொரு கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண் குடிபோதையில் Erica மற்றும் மற்றொரு இளம்பெண்ணின் பின் பக்கங்களை வேண்டுமென்றே தட்டியிருக்கிறார்.

இதனால் இரு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, அங்கிருந்து புறப்பட்டுள்ளனர் Andresம் Ericaம்.

ஆனால், அவர்களை பின் தொடர்ந்த அந்த இன்னொரு கூட்டத்திலிருந்த சிலர் வேறு சில நண்பர்களை வரவழைத்து வம்புச் சண்டைக்கு இழுத்தும் Andresம் Ericaம் தங்கள் பக்க நியாயத்தை மட்டும் கூறியுள்ளனர்.

அதற்குள் காரில் வந்த அந்த கூட்டத்தின் நண்பர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.

Andres மீது குண்டு பாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக Erica அவரைத் தள்ளிவிடும்போது, Ericaவின் நெஞ்சில் குண்டு ஒன்று பாய்ந்து முதுகு பக்கமாக வெளியேறி Andresன் விலாவைத் துளைத்து வெளியேறியுள்ளது.

Erica கீழே விழுவதைக் கண்ட Andres, அவர் கீழே விழாமல் அவரைத் தாங்கிப் பிடிக்க, சுயநினைவிழந்து சரிந்துள்ளார் அவர்.

CPR பயிற்சி பெற்ற Andres தன் காதலிக்கு முதலுதவி செய்ய முயற்சி செய்யும்போது, தன்னையறியாமல் அவரும் மயங்கி சரிந்துள்ளார்.

கண் விழிக்கும்போது தாங்கள் இருவரும் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்படுவதை மட்டும் பார்த்துள்ளார் Andres.

பின்னர் மருத்துவமனையில் Erica உயிரிழந்ததை அறிந்து கொண்ட Andres, தன் உயிரை காப்பாற்ற முயன்று தனக்காக Erica தன் உயிரை கொடுத்ததாக கூறி கதறுகிறார். பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Andresஐயும் Ericaவையும் துப்பாக்கியால் சுட்ட நபர் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *