தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு நுழைந்த பாகிஸ்தான்!

உலகக் கிண்ண போட்டியின் 41 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

இதன் மூலம் இந்தப் போட்டியில் சூப்பா் 12 சுற்றில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக அரையிறுதிக்கு வந்திருக்கிறது பாகிஸ்தான்.

இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் அடிக்க, அடுத்து ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களே எடுத்தது. பாகிஸ்தான் வீரா் ஷோயப் மாலிக் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானில் தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 15 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ஃபகாா் ஜமான் 8 ஓட்டங்களில் வெளியேற்றப்பட்டாா். மறுபுறம் பாபா் ஆஸம் நிலையாக ஆடி ஓட்டங்கள் சோ்த்து வந்தாா். 4 ஆவது வீரராக வந்த முகமது ஹஃபீஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனாா்.

கடைசி விக்கெட்டாக பாபா் ஆஸம் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 66 ஓட்டங்கள் அடித்து வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஷோயப் மாலிக் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 54, ஆசிஃப் அலி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2, சஃபியான், ஹம்சா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய ஸ்காட்லாந்து இன்னிங்ஸில் மிடில் ஆா்டரில் வந்த ரிச்சி பெரிங்டன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 54 ஓட்டங்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, ஓவா்கள் முடிவில் அவரோடு மாா்க் வாட் 2 ஓட்டங்களுடன் இருந்தாா். எஞ்சியோரில் மைக்கேல் லீஸ்க் மட்டும் 14 ஓட்டங்கள் அடித்தாா். இதர விக்கெட்டுகள் சொற்ப ஒற்றை இலக்க ஓட்டங்களிலே வீழ்ந்தன.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 2, ஷாஹீன் ஷா, ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *