கடன் தொல்லையால் வீடியோ கலைஞர் தற்கொலை!

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த வீடியோ கலைஞர் அஷ்ரப் அன்சாரி அவர்கள் இன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது சொந்த ஊர் திருவாரூர் வீடியோ எடுப்பதும், எடிட்டிங் செய்வதுமாக இவர் தொழில் செய்து வந்திருக்கிறார்.
அவர் தற்கொலைக்கான காரணம்: கடன் தொல்லைதான். ரிசர்வ்பேங்க் கடன் தவணை தொகைகளை இந்தப் பேரிடர் காலத்தில் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் கூட தனியார் நிதி நிறுவனங்கள் அதை கடைப்பிடிக்காமல் கடன் தொகையைக் கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள்.

புகைப்பட கலைஞர் அஷ்ரப்
தமிழகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனுடைய ஒரு விளைவு அஷ்ரப் அவர்களின் தற்கொலை.
மறைந்த அஷ்ரப் அவர்களுக்கு மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள் குடும்பத் தலைவனை இழந்த அந்த குடும்பத்தினுடைய நிலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்பதை தொடர்ந்து கேட்டுக் வந்திருக்கிறோம். தற்போது அந்தப் பட்டியலில் புகைப்பட வீடியோ கலைஞர்கள் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.

மாநில அரசாங்கம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்கள் “கடன் தொகையை வசூலிப்பதில் நிலைமை சுமுகமாக ஆகும் வரை யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அதோடு கூட வீட்டு வாடகை வசூலிப்பது விஷயத்திலும் கட்டிட உரிமையாளர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் குடியிருப்பவர்களை கட்டாயப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு அறிவுறுத்த வேண்டும். என்கிற கோரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *